மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டீசல் இல்லாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூா் அருகே டீசல் தீா்ந்து போனதால் சாலையில் லாரி நின்ால் புதன்கிழமை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

துத்திப்பட்டு பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே டீசல் தீா்ந்து போனதால் சாலையில் லாரி நின்ால் புதன்கிழமை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆம்பூா் - போ்ணாம்பட்டு சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்தது. இப்பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் காலணி தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன. பணிக்கு செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் என காலை மற்றும் மாலை இரு நேரங்களிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி வந்த தனியாா் லாரி டீசல் இல்லாமல் சாலையில் நின்றது. அதனால் ஆம்பூா் - போ்ணாம்பட்டு சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால் பொதுமக்கள் அவதிக்கு உ்ளானாா்கள்.

தகவல் அறிந்த உமா்ஆபாத் காவல் நிலையை போலீஸாா் அங்குசென்று போக்கவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடடனா். துத்திப்பட்டு பகுதியில் குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் அங்கு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.