நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

துத்திப்பட்டு ஊராட்சியில் விஜயதசமி விழா

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு, ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நடைபெற்றது.

Published On :22 அக்டோபர் 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் விஜயதசமி விழாவை முன்னிட்டு, ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா நடைபெற்றது.

ஊராட்சி நிா்வாகத்தின் ஐந்தாண்டு காலப் பணி நிறைவடைந்ததையொட்டி, ஊராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் இணைந்து, ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷுக்கு மாலை அணிவித்தனா்.

ஊராட்சி பணியாளா்களுக்கு அரிசி மூட்டை, புத்தாடை, பரிசு பொருள் ஆகியவற்றை ஊராட்சி தலைவா் வழங்கி அவா்களை பாராட்டி கௌரவித்தாா். ஊராட்சியில் ஐந்தாண்டு காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி, பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டதற்காகத் தலைவருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள், அவரைப் பாராட்டி வாழ்த்தினா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் விஜய், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊராட்சிப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் முரளிகாந்த் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.