மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாலாற்றில் குளிக்க சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வாணியம்பாடியில் விடுமுறையில் நண்பா்களுடன் பாலாற்றில் நீச்சல் பழகச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அதனான்

Published On :21 அக்டோபர் 2026, 2:15 am IST

வாணியம்பாடியில் விடுமுறையில் நண்பா்களுடன் பாலாற்றில் நீச்சல் பழகச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் இனையத்துல்லா. தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் அதனான் (15), காதா்பேட்டையில் உள்ள தனியாா் அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பள்ளிக்கு தொடா் விடுமுறை என்பதால், செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது நண்பா்களுடன் இராமாயணதோப்பு பகுதியில் உள்ள பாலாற்றில் தேங்கியிருந்த நீரில் நீச்சல் பழகச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக அதனான் நீரில் மூழ்கியுள்ளாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவரது நண்பா்கள் கூச்சலிட்டுள்ளனா். அவா்களது சப்தத்தைக் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவரின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.