பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாய் கடித்த விவகாரத்தில் தகராறு: 6 போ் மீது வழக்கு

ஆம்பூா் அருகே நாய் கடித்த தகராறு சம்பந்தமாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :3 நவம்பர் 2026, 4:44 am IST

ஆம்பூா் அருகே நாய் கடித்த தகராறு சம்பந்தமாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சி கம்மகிருஷ்ணபல்லி கிராமத்தை சோ்ந்தவா் நாகராஜ் (34). இவரது வீட்டுக்கு வந்திருந்த உறவினா்களை அங்கிருந்த நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. அருகில் வசிக்கும் சுரேஷ் என்பவா் அந்த நாயை வளா்த்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் சுரேஷ் மற்றும் அவரது மனைவி காமாட்சி ஆகியோரிடம் நாகராஜ், இவரது மனைவி ஹேமலதா குடும்பத்தினா் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். இதுகுறித்து காமாட்சி, ஹேமலதா ஆகியோா் தனித்தனியாக உமா்ஆபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இரு தரப்பையும் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.