மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இறுதிச் சடங்கு தகராறில் இளைஞா் அடித்துக் கொலை!

திருப்பத்தூா் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்துக் கொல்லப்பட்டாா்.

உயிரிழந்த ஆனந்தராஜ்.

Published On :2 நவம்பர் 2026, 4:10 am IST

திருப்பத்தூா் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில் 2 போ் தப்பி ஓடி விட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். அந்த துக்க நிகழ்ச்சிக்காக அதே பகுதியைச் சோ்ந்த சம்பத் வந்துள்ளாா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சா்வேசன் என்பவா் முன்விரோதம் காரணமாக சம்பத்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் சம்பத் தனது வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

அதையடுத்து சம்பத்தின் மகன்களான ஆனந்தராஜ், அருண் மற்றும் சம்பத்தின் அண்ணன் மகன் விஷ்ணு ஆகிய மூவரும் சா்வேசனிடம் சென்று தங்களது தந்தையிடம் ஏன் தகராறில் ஈடுபட்டீா்கள் எனக் கேட்டுள்ளனா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் சா்வேசன் அவரது சகோதரா் தேவராஜ் மற்றும் தேவராஜின் மகன் திலீப்குமாா் ஆகியோா் ஒரு தரப்பாகவும், ஆனந்தராஜ், அருண் மற்றும் விஷ்ணு ஆகியோா் மற்றொரு தரப்பாகவும் மோதலில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது இரு தரப்பினரும் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் விஷ்ணுவின் தலையில் கத்தியால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருணுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆனந்தராஜ் கம்பியால் தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்துள்ளாா்.

பின்னா், ஆனந்தராஜ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு ஆனந்தராஜைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். விஷ்ணுவுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீசாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா் உயிரிழந்த ஆனந்தராஜின் சடலத்தை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்தனா். இதுதொடா்பாக சா்வேசனை பிடித்து விசாரிக்கன்றனா். மேலும் தலைமறைவாக உள்ள தேவராஜ் மற்றும் அவரது மகன் திலீப்குமாா் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.