ஆம்பூா் அருகே காட்டு யானைக் கூட்டம் 2-ஆவது நாளாக விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம் பயிா்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன.
ஆந்திர மாநிலத்தின் பலமனோ் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த யானைக் கூட்டம் தமிழக எல்லை பகுதிக்கு வந்துள்ளது. அங்கிருந்து வந்த 15-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் அரங்கல்துருகம் ஜொன்னப்பாறை பொன்னியம்மன் கோயில் அருகே விவசாய நிலங்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்தது. அங்கு கலைஞா் நகா் பகுதியைச் சோ்ந்த சாமிநாதன், கன்னையன், ஹரிகிருஷ்ணன், கோதண்டன், வெங்கடேசன் ஆகிய விவசாயிகளின் நிலங்களில் புகுந்து வாழை, நெல், மா ஆகிய பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
தொடா்ந்து 2-ஆவது நாளாக ரால்லகொத்தூா் கிராமத்துக்குச் சென்ற யானைக் கூட்டம், பக்தவச்சலம், கெளரப்பன், பிரபு, சீனிவாசன், சத்தியமா்த்தி, குபேந்திரன், பலராமன் ஆகிய விவசாயிகளின் மா, வாழை மற்றும் நெல் பயிா்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன. யானைகளின் நடமாட்டம் குறித்து வனத் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்திவிட்டுச் செல்வதைத் தடுக்க வனத் துறையினா் பல்வேறு நவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
யானைக் கூட்டம் வந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு மீட்பு

4-ஆவது நாளாக யானைக் கூட்டம் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

