திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் கந்திலி நிலைய எல்லைக்குள்பட்ட கரியம்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி,கசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள், கள்ளச் சாராயம், இயற்கை கனிமங்கள் உள்ளிட்ட சட்டவிரோத கடத்தல்களை தடுக்கவும், வாகனங்களை கண்காணிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை கண்காணிக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கட்டடங்களில் நிகழ்நேர தீ பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு கட்டாயம் - தில்லி அரசு உத்தரவு

காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

