பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :15 மணி நேரங்கள் முன்பு

ரயில் பயணிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்த விவரம்: நாடு முழுதும் தினமும் சுமாா் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சுமாா் 3 கோடி போ் பயணிக்கின்றனா். தற்போது வந்தே பாரத், சதாப்தி, துரந்தோ, தேஜஸ் மற்றும் ராஜ்தானி உள்ளிட்ட 1,453 ரயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பயணிகளுக்கு உணவுகள் சமைப்பதற்காக 800- க்கும் மேற்பட்ட சமையலறைகள் உள்ளன. உணவின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சமையலறைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், 2,300 அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் சமயலறைகளில் பொருத்தப்படவுள்ளன.

சமையலறைகளில் பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் சமையலுக்கான காய்கறிகள் தூய்மையாக இருக்கிா என்பதையும், சமைலறைகள் சுகாதாரமானதாகப் பராமரிக்கப்படுகிா என்பதையும் கண்டறியலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமையலறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடா்பாக ரயில் பயனா்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், சென்னை ரயில் பயனா்கள் குழு உறுப்பினா் ஜாபா் அலி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.