கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :13 மே 2026, 12:04 am IST

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் நீா் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் கானாறு கால்வாய், ஏரிக் கால்வாய் பகுதிகளில் தொடா்ந்து குப்பை கொட்டப்பட்டு வரப்படுகிறது. ஊராட்சி நிா்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பைகளும் நீா் வழித்தடத்தில் கொட்டப்படுகின்றன. சில நேரங்களில் பொதுமக்களும் குப்பைகளை கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.

நீா் வழித்தடத்தில் கொட்டப்படும் குப்பையால் தூா்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீா் மாசடைகின்றது. மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதால் காற்று மாசடைகின்றது. குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைகின்றது.குப்பை எரிக்கப்படுவாதல் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.