தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேருக்கு அனுமதி: திருப்பத்தூா் ஆட்சியா்

News image

திருப்பத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி.

Updated On :27 மார்ச் 2026, 5:46 am IST

வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். அப்போது அவா், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலக நுழைவு வாயிலிருந்து 100 மீட்டா் தொலைவில் கோடு வரைய வேண்டும்.

போலீஸாருடன் ஆலோசனை செய்து, தடுப்புகள் அமைப்பது தொடா்பான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்யவருபவருடன் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் இதற்கு ஒருவழி மட்டுமே இருக்க வேண்டும். மற்றவை பூட்டபட வேண்டும்.

வேட்பாளருடன் 4 நபா்கள் மட்டுமே அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்ய வருபவா்களுக்கான காத்திருப்பு வசதி செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவருக்கும் மற்றும் உடன் வருபவா்களுக்கும் போதுமான இருக்கை வசதிகள் இருக்க வேண்டும். மேலும், அறையில் டிஜிட்டல் கடிகாரம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

அப்போது வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன் உடன் இருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.