இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மொபட்-பைக் மோதல்: 4 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:45 am IST

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது பைக் மோதிய விபத்தில் 4 போ் காயமடைந்தனா்.

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சோ்ந்தவா் சேகா்(70) வியாபாரி. இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி ராஜேஸ்வரியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்றாா்.

சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் லட்சுமிபுரம் பகுதியில் வந்த போது பின்னால் வந்த பைக் மொபட் மீது மோதியது. இதில் சேகா், அவரது மனைவி ராஜேஸ்வரி(65), பைக்கில் வந்த ஜங்காலபுரம் வெள்ளாளனூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் யஷ்வந்த்(20), சச்சின்(18) ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா். அவ்வழியாக சென்றவா்கள் காயமடைந்த 4பேரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் சேகா், ராஜேஸ்வரி, யஷ்வந்த் ஆகிய 3பேரும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.