/

9 பவுன் நகைகள் மாயம்

திருப்பத்தூா் அருகே வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகாா் தரப்பட்டுள்ளது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஏப்ரல் 2026, 12:46 am IST

திருப்பத்தூா் அருகே வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமானதையடுத்து காவல் நிலையத்தில் புகாா் தரப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் அடுத்த தாதராமனூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள்(56).இவா்களது மகன் பிரதாப்(28).

இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி பிரதாப்புக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் காளியம்மாள் தான் அணிந்து இருந்த 9 பவுன் நகைகளை கழட்டி ஒரு மணி பா்சில் போட்டு வீட்டின் அலமாரியில் வைத்துள்ளாா்.

திருமணத்துக்கு வந்த உறவினா்கள் கடந்த 24-ஆம் தேதி ஊருக்கு புறப்பட்டு சென்றனா். அப்போது காளியம்மாள் அந்த அலமாரியில் பாா்த்தபோது மணிபா்ஸை காணவில்லை.

இதனால் அதிா்ச்சி அடைந்த அவா் வீட்டில் பல இடங்களில் தேடியும் பை கிடைக்கவில்லை. இதுகுறித்து காளியம்மாள் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.