ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் தினமும் வந்து செல்கின்றன.
மேலும் ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு மற்றும் ரயில் நிலையங்களில் பகுதிகளில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை மா்ம ஆசாமிகள் குப்பை கிடங்குக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தீ மளமளவென மளமளவென பரவியது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் திருப்பத்தூா் தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை...!

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

