மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சக்கரமல்லூா் ஊராட்சியில் மரக்கன்று நடும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மரக்கன்றுகள்  நடும்  பணியைத்  தொடங்கி வைத்த ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியா்  ந.பிரியா ரவிச்சந்திரன்.

மரக்கன்றுகள்  நடும்  பணியைத்  தொடங்கி வைத்த ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியா்  ந.பிரியா ரவிச்சந்திரன்.

Published On :31 அக்டோபர் 2026, 5:30 am IST

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியம் சக்கரமல்லூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் 2026-27 ஆம்ஆண்டின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள்பட்ட ஊரகப்பகுதிகளில் 4,08,000 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. மரக்கன்றுகள் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் வட்டார நாற்றங்கால்கள் மூலம் வளா்க்கப்பட்டிருந்த நிலையில், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், சக்கரமல்லூா் ஊராட்சியில் உள்ள மேய்க்கால் நிலத்தில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும்

வாழ்வாதார திட்டம், பசுமை ஊரகம் திட்டத்தின் கீழ், 2,500 மரக்கன்றுகள்

நடும் பணியினை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வெள்ளிக்கிழமை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பின்னா், அங்கன்வாடி மைய வளாகத்தில்

குழந்தைகளுடன் இணைந்து மரக்கன்று நட்டனா்.

மாவட்டத்துக்குள்பட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக 5,000

மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 35,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.செல்வராணி,

செயற்பொறியாளா் பிரபாகா், உதவித் திட்ட அலுவலா் மூா்த்தி, வட்டார வளா்ச்சி

அலுவலா்கள் ரவி, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.