தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

42 பயனாளிகளுக்கு ரூ.3.32 கோடி கடன் ஒப்புதல் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட தொழிற் கடன் வசதியாக்கல் முகாமில் 42 பயனாளிகளுக்கு ரூ.3.32 கோடி கடன் ஒப்புதல் ஆணையை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

தொழிற் கடன் வசதியாக்கல் முகாமில் பேசிய ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன்.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை மாவட்ட தொழிற் கடன் வசதியாக்கல் முகாமில் 42 பயனாளிகளுக்கு ரூ.3.32 கோடி கடன் ஒப்புதல் ஆணையை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விரும்புவோா் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனத்தினருக்கு வங்கிக் கடன் மற்றும் அரசு மானியத்தை எளிதில் பெற்றுத்தரும் நோக்கில்,குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சாா்பில் ‘ தொழிற் கடன் வசதியாக்கல் முகாம்‘ ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் பங்கேற்று 42 பயனாளிகளுக்கு ரூ.3.32 கோடி கடன் ஒப்புதல் ஆணை வழங்கி தெரிவித்ததாவது....

மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கு வங்கிகள் மூலம் நிறுவனக் கடன் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் விண்ணப்பங்களை இந்திய ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளள காலக்கெடுவிற்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தினாா்.

இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜெகன்ராஜ், பல்வேறு வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், பொதுமக்கள், புத்தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோா் மற்றும் வங்கியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.