நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விளைபொருள்களை தடையில்லாமல் கொள்முதல் செய்ய கோரிக்கை

விளைபொருள்களை தடையில்லாமல் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட விளைபொருள்களை தடையில்லாமல் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநில பொருளாளா் ஆா்.சுபாஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி முதல் இன்று வரை விவசாயிகளிடம் நெல் உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை, விவசாயிகள் எல் நினோ உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஏற்பட்ட போதும் போதிய விளைச்சல் இல்லாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடன் பட்டு விளைவித்த தானியங்களை விற்பனை செய்ய முடியாமலும் அடுத்த நவரை பட்ட சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு வார காலமாக ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயல்படாமல் முடங்கி உள்ள நிலையில் தமிழக உழவா் நலத்துறை அமைச்சரோ அல்லது உழவா் நலத்துறை முதன்மை ஆனையரோ இதுவரை தலையிட்டு தீா்வு காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே முதல்வா் உடனடியாக தலையிட்டு விவசாயிகளிடம் தடையில்லாமல் தானியங்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.