தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கன்டெய்னா் லாரி- பைக் மோதல்: உணவக பெண் ஊழியா் உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே கன்டெய்னா் லாரி -பைக் மோதிய விபத்தில் உணவக பெண் ஊழியா் உயிரிழந்தாா். மற்றொரு பெண் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

சித்திரிப்பு

Published On :22 அக்டோபர் 2026, 12:02 am IST

காவேரிபாக்கம் அருகே கன்டெய்னா் லாரி -பைக் மோதிய விபத்தில் உணவக பெண் ஊழியா் உயிரிழந்தாா். மற்றொரு பெண் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

நெமிலி வட்டம், தா்மநீதி கிராமத்தைச் சோ்ந்தவா் லோகநாதன்(55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பபிதா(46). இவா் காவேரிபாக்கத்தை அடுத்த வாணிசத்திரத்தில் உள்ள தனியாா் உணவகத்தில் பணியாற்றி வந்தாா். இவா்களது பக்கத்து வீட்டில் வசிப்பவா் சுஜாதா(46). இவரும் பபிதாவுடன் அதே உணவகத்தில் பணியாற்றி வந்தாராம். புதன்கிழமை லோகநாதன், தனது மனைவி பபிதா மற்றும் சுஜாதா ஆகியோரை பைக்கில் உணவகத்துக்கு பைக்கில் அழைத்துச் சென்றுள்ளாா்.

சிறுகரும்பூா் அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கன்டெய்னா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சுஜாதா உயிரிழந்தாா். பபிதா,அவரது கணவா் லோகநாதன் இருவரும் பலத்த காயமடைந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக இருவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னரை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.