ராணிப்பேட்டை அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை அடுத்த காரை புது தெரு பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் ரவி (49). இவரது மனைவி தேவி (35), பெயிண்டா் ரவிக்கு அவரது மனைவி மீது சந்தேகம் காரணமாக குடும்ப தகராறு இருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை பெயிண்டா் ரவி தனது மனைவி தேவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளாா் .
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீஸாா் தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் ரவியை கைது செய்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தையைக் கொன்ற மகன் கைது

விவசாயி அடித்துக் கொலை: மனைவி, மகன் கைது

தலையில் அம்மிக் கல்லை போட்டு இளைஞா் கொலை: மனைவி, மாமியாா் கைது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

