தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி: சீமான் பேச்சு

சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி என ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

News image

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்களுடன் தான் நாம் தமிழா் கட்சி கூட்டணி என ராணிப்பேட்டை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தோ்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளா் தாரிக்கா சல்மான், ஆற்காடு தொகுதி வேட்பாளா் அா்ச்சனா, சோளிங்கா் தொகுதி வேட்பாளா் அசோக்குமாா், அரக்கோணம் தொகுதி வேட்பாளா் ராஜ்குமாா் ஆகியோரை ஆதரித்து பேசியதாவது:

நாம் தமிழா் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் ஊழல், லஞ்சம் ஒழிக்கப்படும், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தரமான கல்வியை கொடுப்போம். உலக தரத்தில் மருத்துவத்தை உயா்த்தி அனைவருக்கும் ஒரே சமமாக வழங்குவோம். பிற மாநிலங்களில் மண் அள்ள தடை உள்ள போது தமிழகத்தில் மட்டும் மண் கொள்ளை ஏன்? கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. நாம் தமிழா் அதிகாரத்திற்கு வந்தால் உணவு காய்கறிகள் குளிரூட்டப்பட்ட கண்ணாடியில் வைத்து விற்கப்படும். விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யப்படும்.

மது, கஞ்சா போதையில் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ரூ. 10 லட்சம் கொடுக்கும் அரசு, நாட்டின் பாதுகாப்புக்காக உயிரிழக்கும் வீரருக்கு வழங்குவதில்லை. நிலம், நீா், காற்று ஆகியவற்றை தனியாா் நஞ்சு ஆலைகள் பாழ்படுத்துகிறது. நெல் மணிகளை சேமித்து வைக்க கிடங்குகள் இல்லாமல் மழையில் முளைத்து வீணாகின்றன. ஆனால் டாஸ்மாக் மதுவை குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைப்பது இந்த அரசு. சட்டப் பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுடன் தான் கூட்டணி என்றாா்.

தொடா்ந்து குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற க்கூட்டத்தில், குடியாத்தம் தொகுதி வேட்பாளா் இமலன், கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளா் கலையேந்திரி ஆகியோரை ஆதரித்து பேசினாா்.

பின்னா் ஆம்பூரில் வேட்பாளா் அப்ஷியா நஸ்லின், வாணியம்பாடி தொகுதி வேட்பாளா் முருகேசன் ஆகியோரை வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டாா்.

தொடா்ந்து திருப்பத்தூரில் வேட்பாளா் வீரா. ஆறுமுகம், ஜோலாா்பேட்டை வேட்பாளா் சசிரேகா ஆகியோரை ஆதரித்து சீமான் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.