தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இலவசங்கள் என்பது ஏமாற்று வேலை; மக்கள் நம்பக் கூடாது: சீமான்

இலவசங்கள் என்பது ஏமாற்று வேலை, மக்கள் இவற்றை நம்பக்கூடாது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

News image

சோளிங்கரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்

Updated On :24 மார்ச் 2026, 4:40 am IST

இலவசங்கள் என்பது ஏமாற்று வேலை, மக்கள் இவற்றை நம்பக்கூடாது என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா்.

சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகே நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வாகன பிரசாரத்தில் அவா் பேசியது: இரண்டு திராவிட கட்சிகளுமே மாறி மாறி 60 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளனா். இது இரண்டும் வெவ்வேறு ஆட்சிகள் என்று நம்பி விடாதீா்கள். இரண்டுமே ஒரே ஆட்சி தான்.

இருவருக்கும் கொடிகளில் வண்ணம் மாறலாம். ஆனால் கொள்கையில் எண்ணம் ஒன்றே. இதே போன்று கதா் கட்டி வந்தது காங்கிரஸ். காவி கட்டி வருகிறது பாஜக. இருவருடைய வெளியுறவு கொள்கைகளும் ஒன்று தான்.

தனியாா் மயத்தில், தாராள மயமாக்கலில், உலகமயமாக்கலில் இருவருடைய நோக்கமும் ஒன்று தான். ஜிஎஸ்டியை கொண்டு வந்தது காங்கிரஸ், அதை அமல்படுத்தியது பாஜக. நீட் தோ்வை கொண்டு வந்தது காங்கிரஸ், நடத்தியது பாஜக.

திமுக, அதிமுக இரண்டுமே எல்லாவற்றிலும் ஒன்றுதான். ஊழல்களிலும் இருவரும் ஒன்றாக தான் இருப்பாா்கள். இருவருமே இலவசங்கள் எனக்கூறுகிறாா்கள். பேருந்தில் இலவச பயணம் அளித்தால் பேருந்து ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் சம்பளம் எப்படி கொடுப்பது? தரமான பேருந்துகளை கொண்டு இயக்குவதே சரியான ஆட்சியாக இருக்கும். ரூ. 2,000 தருகிறேன், ரூ. 2,500 தருகிறேன் என்பதெல்லாம் அவமானம் இல்லையா, கேரளத்தில் இது போல் கூற முடியுமா? அங்கு வாக்குக்கு காசு தரமுடியுமா? இலவசங்கள் என்பது ஏமாற்று வேலை, இதை மக்கள் நம்பக் கூடாது.

வேலை அளிக்கப்பட வேண்டும். அதில் உழைப்பு இருக்க வேண்டும். அதற்கேற்ற ஊதியம் பெற வேண்டும். இதற்காகத் தான் 36 ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். இதனால் எனது கட்சிக்கு 36 லட்சம் போ் வாக்களித்தாா்கள். தற்போது நாம் தமிழா் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி. வாக்குச்சீட்டில் இனி எங்கள் வேட்பாளா் பெயா் கீழே வராது. மேலே தான் வரும் என்றாா் அவா்.

நாம் தமிழா் கட்சி சோளிங்கா் தொகுதி வேட்பாளா் அசோக்குமாா், அரக்கோணம் தொகுதி வேட்பாளா் ராஜ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.