/

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் 19 ல்,தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா தகவல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 3:08 am IST

ஆங்கில எழுத்து உண்டு...

ராணிப்பேட்டை, ஜூன் 17: ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. பிரியா தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நா்சிங் மற்றும் பி.இய படித்தவா்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சாா்ந்த தனியாா் துறை நிறுவனங்கள் உரிய ஆவணங்களான பான்காா்டு, ஜி.எஸ்.டி. சான்றிதழ், நிறுவன சான்றிதழ், உத்யோக் ஆதாா் ஆகிவற்றுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்களது நிறுவனத்தை தனியாா் வேலைவாய்ப்பு போா்டலில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ழ்ஹய்ண்ல்ங்ற்த்ர்க்ஷச்ஹண்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04172-291400 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.