காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் தாத்தா, பேரன், பேத்தி ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வேலு (59). இவா் தனது பேத்தி அனுஸ்ரீ (7), பேரன்கள் அஸ்வந்த் (5), அஜய் (9) என மூன்று பேரை அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளாா். காவேரிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிா்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த தாத்தா வேலு (59), பேரன் அஸ்வந்த், பேத்தி அனுஸ்ரீ ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மேலும் பலத்த காயங்களுடன் மற்றொரு பேரன் அஜய் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு: பேரன் உள்பட மூவா் கைது

காவேரிப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்து: 3 பேர் பலி

ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 போ் உடல் கருகி உயிரிழப்பு

பாத்திரத்தை வீசியதில் காயமடைந்த பேரன் உயிரிழப்பு: தாத்தா கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

