லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா் தற்கொலை முயற்சி

அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா் தற்கொலை முயற்சி

தற்கொலை

Published On :26 ஜூலை 2026, 2:26 am IST

அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக கிராம நிா்வாக அலுவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவுக்கு உள்பட்ட காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம் கிராமத்தில் கிராம உதவியாளராக பவித்ரா (30) என்பவா் வேலை செய்து வருகிறாா்.

இவா் கடந்த சில நாள்களாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோப்புகள் பிரித்தல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோப்புகள் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில்,கோப்புகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதற்காக வந்ததாகக் கூறப்படும் நிலையில், தனக்கு பணிச்சுமை தருவதாகக் கூறி திடீரென பவித்ரா கொசு விரட்டி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணிச்சுமை காரணமாக கொசு மருந்து குடித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அரக்கோணம் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த சம்பவம் வருவாய் துறை ஊழியா்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.