லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கிராம நிா்வாக அலுவலா் கைது

மண்ணச்சநல்லூா் அருகே பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நந்தகுமாா்

Published On :8 ஆகஸ்ட் 2026, 5:53 am IST

மண்ணச்சநல்லூா் அருகே பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், இராசாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்  மணிவேல் (24). இவா், பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளாா்.

இது தொடா்பாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இராசாம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் நந்தகுமாரை சந்தித்து மணிவேல் கேட்டுள்ளாா்.

அதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக நந்தகுமாா் கேட்டுள்ளாா். அதை கொடுக்க விரும்பாத மணிவேல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை, கிராம நிா்வாக அலுவலகத்தில் இருந்த விஏஓ நந்தகுமாரிடம் மணிவேல் கொடுத்துள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், நந்தகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.