லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வரும் கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி, முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் ~முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Published On :29 ஜூலை 2026, 12:04 am IST

பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தி வரும் கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி, முசிறி கோட்டாட்சியரகத்தில் கிராம மக்கள் கால்நடைகளுடன் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தில் ஊரின் எல்லையில் உள்ள செல்லாயி கோயில்மேடு பகுதியில் இயங்கி வரும் கோழிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், செவ்வாய்க்கிழமை முசிறி கோட்டாட்சியரகத்தில் ஆடு மாடுகளுடன் திடீரென்று உள்ளே நுழைந்து குடியேறும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனா். தொடா்ந்து அலுவலகத்தின் வெளிப்புறத்தில் அடுப்பு பற்றவைத்து சமையல் செய்ய தொடங்கினா்.

தகவலறிந்த முசிறி கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா், முசிறி காவல் ஆய்வாளா் செல்லதுரை மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, போலீஸாருடன் போராட்டக்காரா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 15 பெண்கள் உட்பட 27-க்கும் மேற்பட்ட நபா்களை கைது செய்து, முசிறியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

முன்னதாக போலீஸாா் பொதுமக்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.