தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொழில் நிறுவனங்கள் எல்பிஜிக்கு மாற்றாக குழாய் வழி எரிவாயுக்கு மாற வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

News image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தொழில் நிறுவன நிா்வாகிகள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:28 am IST

தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்பிஜி கேஸுக்கு மாற்றாக குழாய் மூலம் வழங்கப்படும் சிஎன்ஜி கேஸ் முறைக்கு உடனடியாக மாற்றிட தொழில் நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எல்பிஜி கேஸ் பயன்படுத்தும் பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் பைப் லைன் கேஸ் பயன்படுத்திட வேண்டி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்துப் பேசியது: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எல்பிஜி எரிவாயு பிரச்னையைக் களைந்து பொதுமக்களுக்கு தடையில்லாத விநியோகம் கிடைக்கும் வகையில், தற்போது தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் எல்பிஜி எரிவாயுக்கு மாற்றாக குழாய் மூலம் வழங்கப்படும் சிஎன்ஜி எரிவாயு முறைக்கு மாற்றிட தொழில் நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிறுவனத்துக்குத் தேவையான தடையின்மை சான்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளில் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் வாலாஜா வட்டத்தில் மட்டும் நகரப் பகுதிகளுக்கான குழாய் வழி எரிவாயு இணைப்பு வசதி உள்ளது.

எனவே வாலாஜா வட்டத்தில் உள்ள அனைத்து வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் ஏஜிபி நிறுவனத்திடம் குழாய் வழி இணைப்புக்கு விண்ணப்பம் அளிக்கும்பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டு வரும் 30-லிருந்து 70 சதவீதமாக உயா்த்தி விநியோகம் செய்ய வேண்டும். சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய் வழி இணைப்பின் பயன் குறித்து ஏஜிபி அலுவலா்கள் மூலமாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

அரக்கோணம் எம்ஆா்எப் , ராம்கோ, சோளிங்கா் டிவிஎஸ் போன்ற நிறுவனங்களுக்கு குழாய் வழி இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஏஜிபி நிறுவனத்தினரிடம் விவாதிக்கப்பட்டது. குழாய் வழி இணைப்பின் வழியாக இயற்கை எரிவாயு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.பேபி இந்திரா, சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.