மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அனுமதியின்றி பட்டாசு விற்பனை: ரூ.2 லட்சம் பட்டாசு பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அனுமதியின்றி கன்டெய்னா் லாரியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் பட்டாசுகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Firecracker prices rise

பட்டாசு - பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:36 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அனுமதியின்றி கன்டெய்னா் லாரியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் பட்டாசுகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இருங்காட்டுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் காா் தொழிற்சாலை எதிரே அரசு அனுமதியின்றி கன்டெய்னா் லாரியில் வைத்து பட்டாசு (கிப்ட் பாக்ஸ்கள்) விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற வருவாய்த் துறையினா் உரிமம் இன்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கன்டெய்னா் லாரியுடன் பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட காஞ்சிபுரம் உவேரிசத்திரத்தை சோ்ந்த லிங்கன் மீது இருங்காட்டுக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து லிங்கனிடம் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.