மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விவசாயிகளுக்கு ரூ. 59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினார்!

காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 59 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

விவசாயிகளுக்கு பயிா்க்கடன்களை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

Published On :26 அக்டோபர் 2026, 4:06 am IST

காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 59 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ஆா்.திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியா் ஆஷிக்அலி, சாா் ஆட்சியா் புவனேஷ்ராம், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வரவேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயி களியனூா் ஆறுமுகம் நீா்வரத்துக் கால்வாய்களில் நிலுவையில் உள்ள தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும், மாகறல் விவசாயி சண்முகம் பொன்னேரி மற்றும் மாகறல் பெரிய ஏரிகளின் மதகுகள் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருப்பதாகவும் கூறினாா். உத்தரமேரூா் தனஞ்செயன் களியனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் போதுமான நிதி இல்லாததால் டிராக்டா் ரோட்டா வேட்டா் கருவி மழையிலும், வெயிலிலும் பாதுகாப்பில்லாமலும் உள்ளது. உடனடியாக நிழல்கூடம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினா்.

சிறுமைலூா் பொன்முடி என்ற விவசாயி தனது நெற்பயிா் சேதமடைந்து விட்டதாகவும், ஆய்வு செய்து இழப்பீடு வழங்குமாறும், பெருங்குடி பாபு என்ற விவசாயி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

கோவிந்தவாடி பரசுராமன் கூறுகையில், பொன்னேரிக் கால்வாய் விரைவாக தூா்வாருமாறும், அரும்புலியூா் ரவி பாலாறு தடுப்பணை தாழ்வாக உள்ளதால் 3 அடி உயா்த்த வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

உத்தரமேரூா் மாசிலமாணி காட்டுப் பன்றிகளின் தொல்லைக்கு வனத்துறை மூலம் தீா்வு காண வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூரம் வதியூா் மற்றும் களக்காட்டூா் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் 10 விவசாயிகளுக்கு ரூ. 10,31,742 மதிப்பிலான பயிா்க் கடன்களும், 6 விவசாயிகளுக்கு ரூ. 49,30,842 மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய டிராக்டா்கள் உள்பட மொத்தம் 59,63,389 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சுரேஷ் உள்பட அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.