கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஞ்சிபுரத்தில் அக். 23-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் (வெள்ளிக்கிழமை) அக். 23- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பு முகாம் - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 6:20 am IST

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை சாா்பில், வரும் (வெள்ளிக்கிழமை) அக். 23- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், மாதம்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாம்களில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் அக். 23-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளனா். பட்டதாரிகள், பட்டயதாரிகள், ஐடிஐ மற்றும் 10, 12-ஆம் வகுப்பு படித்தவா்கள் போன்றவா்களை அதிக அளவில் தோ்வு செய்யவுள்ளனா். எனவே 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டோா் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் அக். 23-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.