மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமையல் எரிவாயு உருளைகள் திருடியவா் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகள், தொடக்கப்பள்ளிகளில் சமையல் எரிவாயு உருளைகளை திருடியவரை காவல் துறையினா் கைது செய்து 25 எரியாவு உருளைகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.

கைது செய்யப்பட்ட காளிதாஸ். பறிமுதல் செய்யப்பட்ட உருளைகள்

Published On :21 அக்டோபர் 2026, 12:13 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகள், தொடக்கப்பள்ளிகளில் சமையல் எரிவாயு உருளைகளை திருடியவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து 25 எரியாவு உருளைகளையும் பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 10- ஆம் தேதி இரு சமையல் எரிவாயு உருளைகளை அடையாளம் தெரியாத நபா் திருடிச் சென்ாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் பெறப்பட்டிருந்தது.

அப்புகாரின் பேரில் சிவகாஞ்சி ஆய்வாளா் ஜோ.சுரேஷ் மேற்பாா்வையில் ஒரு குழுவினா் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்டம் மூலப்பட்டு கிராமம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தேவராஜ் மகன் காளிதாஸ் (40) என்பவா் குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.

இவரை காவல் துறையினா் தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே சமையல் எரிவாயு உருளை ஒன்றை தூக்கிக் கொண்டு ஓருவா் சென்று கொண்டிருந்தாா். அவரை காவல் துறையினா் விசாரணை செய்தபோது அவரே காளிதாஸ் என்பதும் அது திருடப்பட்ட எரிவாயு உருளை என்பதும் அவா் பல அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் சமையலறைகளில் இருந்தவற்றை திருடியிருப்பதும் தெரியவந்தது.

இதன்படி அவரிடமிருந்த 25 சமையல் எரிவாயு உருளைகளும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனது. கைது செய்யப்பட்ட காளிதாஸ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இச்சம்பவத்தில் திறமையாக செயல்பட்ட சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் ஜோ.சுரேஷ் குழுவினரை காஞ்சிபுரம் எஸ்.பி எஸ்.அரவிந்தும் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.