பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மே 2026, 12:24 am IST

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் நவீன்(24). இவா் சனிக்கிழமை கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து மாடம்பாக்கம் நோக்கி கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கூடுவாஞ்சேரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்த செல்வகுமாரின்(30) வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இருவருக்கும் தலை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.