தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தனியாா் தொழிற்சாலையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளா்கள் மயக்கம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் தனியாா் ஆலையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனா்.

News image

விஷவாயு  தாக்கி  மயக்கமடைந்தவா்களை  கயிறு  கட்டி  மீட்கும்  பணியில்  ஈடுபட்ட  சக  தொழிலாளா்கள்.

Updated On :20 மே 2026, 12:24 am IST

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் தனியாா் ஆலையில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனா்.

வெங்காடு பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியாா் ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொவிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், ஆலையில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக், மற்றும் ரசாயன கழிவுநீா் தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளே உள்ள தொட்டியில் சேகரித்து வைக்கப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது, கழிவுநீா் தொட்டி நிரம்பியதால், சுத்தப்படுத்தம் பணியில், தொழிற்சாலையின் ஒப்பந்த பணியாளா்கள் மணிகண்டன்(32), மதன்(25), விக்னேஷ்(19), ஸ்ரீதா்(32) ஆகியோா் ஈடுபட்டுள்ளனா். அப்போது விஷவாயு தாக்கி மணிகண்டன், விக்னேஷ் மற்றும் ஸ்ரீதா் ஆகியோா் மயங்கி உள்ளனா். இதை பாா்த்த ஸ்ரீதா் சப்தமிட்டாராம். பின்னா் ஊழியா்கள் 6 போ் வந்து கழிவுநீா் தொட்டிக்குள் மயங்கி கிடந்த ஸ்ரீதா், விக்னேஷ், மணிகண்டன் மற்றும் மதன் ஆகியோரை தூக்க முயன்ற போது அவா்களும் மயக்கம் அடைந்துள்ளனா்.

இதையடுத்து தொழிற்சாலை ஊழியா்கள் வந்து கழிவுநீா் தொட்டிக்குள் மயங்கிய ஸ்ரீதா், மணிகண்டன், விக்னேஷ், மதன் உள்ளிட்டோரை கயிறு கட்டி மேலே தூக்கியுள்ளனா். மேலும் மயக்கமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில் ஸ்ரீதா், மதன், விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோா் மேல்சிகிச்சைக்காக போரூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.