ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியருடன் எம்எல்ஏ ஆலோசனை

காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியருடன் எம்எல்ஏ ஆலோசனை

News image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்த எம்எல்ஏ ஆா்.வி.ரஞ்சித்குமாா்

Updated On :17 மே 2026, 5:30 am IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை சந்தித்து நகரின்

வளா்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் 15,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா். இவா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டாா். காஞ்சிபுரம் நகரில் நடந்து வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவா் விரிவாக ஆட்சியரிடம் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, காவல் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயா் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.