காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரிய காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ. ஒரு லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரிய காஞ்சிபுரம் சந்தைவெளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முரளி.இவரும் இவரது மனைவி சாந்தியும் மதுரைக்கு உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். வீட்டில் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ. ஒரு லட்சம் ஆகியனவும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து முரளி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், ஆய்வாளா் விநாயகம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், தடயவியல் நிபுணா்கள் மூலமாகவும் மா்ம நபா்களை தேடும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். சம்பவம் தொடா்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
செங்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
