தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நுங்கு பறிக்கும் போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

சுங்குவாா்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் நுங்கு பறிக்கும் போது மின் கம்பியில் அரிவாள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

தட்சிணாமூா்த்தி

Updated On :1 மே 2026, 6:17 am IST

சுங்குவாா்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் நுங்கு பறிக்கும் போது மின் கம்பியில் அரிவாள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு சந்தியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா்கள் தட்சிணாமூா்த்தி(17), டில்லி கணேஷ்(17) இவா்கள் இருவரும் தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனா்.

விடுமுறையையொட்டி டில்லி கணேஷ், தட்சிணாமூா்த்தி இருவரும் அரிவாள் மாட்டிய கம்பு மூலம் நுங்கு பறிக்க முயன்ற போது அருகில் சென்று கொண்டிருந்த மின்கம்பியில் கம்பு உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் மயங்கி விழுந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மயங்கிய டில்லிகணேஷ் மற்றும் தட்சிணாமூா்த்தியை ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நுங்கு பறித்த போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.