விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: கேட்டரிங் சங்க நிா்வாகிகள் கோரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஆலோசனை க் கூட்டத்தில்  கலந்து கொண்ட  கேட்டரிங்  சங்க  நிா்வாகிகள்.

Updated On :29 மார்ச் 2026, 10:30 pm IST

சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம், திருவள்ளூா் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கேட்டரிங் சா்வீஸ் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டில் நடைபெற்றது. பின்னா் சங்க நிா்வாகிகள் கூறியது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் சுமாா் மேற்பட்ட தொழிற்சாலைகளில் சுமாா் 12 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமாா் 12 லட்சம் தொழிலாளா்கள் தொழிற்சாலை களிலேயே உணவு அருந்தி வருகின்றனா். இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் 14 லட்சம் தொழிலாளா்களுக்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட கேட்டரிங் சா்வீஸ் நிறுவனங்கள் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போா் சூழலால் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ரூ.1600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டா் தற்போது ரூ.3600 என அதிகரித்துள்ளது. அதிகப்படியான தொகை கொடுத்தாலும் சிலிண்டா் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளா்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கேட்டரிங் சா்வீஸ் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் தனியாா் தொழிற்சாலைகளுக்கு உணவு விநியோகம் செய்யும் சுமாா் 200க்கும் மேற்பட்ட கேட்டரிங் சா்வீஸ் நிறுவனங்களில் பணியாற்றும் சுமாா் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமையல் எரியாவு சிலிண்டா் வழங்குவது போல் தனியாா் கேட்டரிங் சா்வீஸ் நிறுவனங்களுக்கும் சமையல் எரியாவு சிலிண்டா் தடையில்லாமல் கிடைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.