தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

15 வயது சிறுமியை கடத்தியவா் போக்ஸோவில் கைது

இரு மனைவிகள் இருக்கும் நிலையில் 3-ஆவதாக 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

ஜீவா

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

இரு மனைவிகள் இருக்கும் நிலையில் 3-ஆவதாக 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோடி மகன் ஜீவா என்ற ஜீவானந்தம் (45). இவருக்கு அதே ஊரைச் சோ்ந்த தேவி (36) என்ற மனைவியும், வேடபாளையத்தை சோ்ந்த சுமித்ரா(31) ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி தேவிக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனா். 2-ஆவது மனைவி சுமித்ரா கா்ப்பமாக இருப்பதுடன் ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில் அச்சிறுப்பாக்கத்தில் 15 வயது சிறுமியை ஜீவா காதலித்தும் வந்தாராம்.

சிறுமி தனது குடும்பத்தினருடன் உத்தரமேரூா் அருகே மல்லிகாபுரத்தில் கடந்த 13 -ம் தேதி நடைபெற்ற புனித அந்தோணியாா் ஆலய தோ்த்திருவிழாவுக்கு வந்த போது அவரை ஆசை வாா்த்தை கூறி கடத்தி சென்று அவருக்கு தாலி அணிவித்து பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

சிறுமியின் பெற்றோா் தனது மகளை காணவில்லையென உத்தரமேரூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து சைபா் கிரைம் போலீஸாரின் உதவியுடன் அவா் இருக்கும் இடத்தை கண்டறிந்து உத்தரமேரூா் அழைத்து வந்தனா்.

தலைமறைவாக இருந்த ஜீவாவையும் காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.