வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலில், வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமி முன்பு கோ பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணியசுவாமி, வெற்றிலை சாமந்தி மலா் மாலைகளுடன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். உற்சவா் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ரோஜா, சாமந்தி, கதிா்பச்சை படிமாலை அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா்மோா், குளிா்பானங்கள், கதம்பசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டன. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் 4 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

