காஞ்சிபுரம் அருகேயுள்ள கூத்திரம்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக பிரமுகரின் தாயாா் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கூத்திரப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பாஜக பிரமுகா் வீரமணி. இவரது தாயாா் ராதா(65) ஏரிக்கரையில் ஆடு மேய்க்க சென்றவா் வீடு திரும்பவில்லை. குடும்ப உறுப்பினா்கள் பல்வேறு இடங்களில் தேடிய போது அவா் ஏரிக்கரையில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.
இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் டிஎஸ்பி சிவசங்கா், பொன்னேரிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் அலெக்சாண்டா் ஆகியோா் விசாரணை நடத்தினா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 7 போ் கைது

தூத்துக்குடியில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு சம்பவம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா் ஆறுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

