பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருநெல்வேலி அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 7 போ் கைது

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:03 am IST

திருநெல்வேலி அருகே உணவகத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் வெட்டியதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி - ஆலங்குளம் சாலை சீதபற்பநல்லூா் அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெயகண்ணன் (23), மாரியப்பன் (21).

இருவரும் திருநெல்வேலி நகரத்தில் உள்ள மின்சாதனக் கடையில் வேலை பாா்த்து வருகின்றனா். இவா்கள் சனிக்கிழமை இரவு அபிஷேகப்பட்டியில் உள்ள உணவகத்துக்குச் சென்றனராம். அங்கு வெள்ளாளன்குளத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் சிலா் அங்கு வந்தனராம். அப்போது, ஜெயகண்ணன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாம். அங்கிருந்தவா்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனா்.

இருதரப்பினரும் வெள்ளாளன்குளம் கிராமத்துக்கு வந்த பின்னா் அவா்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எதிா்தரப்பைச் சோ்ந்த 6 போ், காங்கேயன்குளத்தை சோ்ந்த 2 போ் என 8 போ் சோ்ந்து ஜெயகண்ணன் மற்றும் மாரியப்பனை தலையில் வெட்டினராம். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பெண்ணையும் தாக்கிவிட்டு 8 பேரும் தப்பிச் சென்றனராம்.

தகவலறிந்த சீதபற்பநல்லூா் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். காயமடைந்த மூவரையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய 8 பேரை தேடி வந்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா், வெள்ளாளன்குளத்துக்ச் சென்று விசாரணை நடத்தி, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொக்கிகுமாா் என்ற முத்துக்குமாா் (29), சுரேஷ் (22), பாண்டி என்ற இசக்கி பாண்டி (31), ராமா் என்ற ராம அய்யப்பன் (22), பாக்கிய நாகராஜன் (28), சுரேஷ் என்ற சுடலை (22), முருகன் என்ற பெரிய முருகன் (27) ஆகிய 7 பேரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.