கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை வந்த வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்ப பள்ளி மாணவா்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையில், வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய அரசு ஆரம்பப்பள்ளி மாணவா்களை வெங்காடு ஊராட்சிமன்ற தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றாா்.
இதையடுத்து வெங்காடு அரசு உயா்நிலைப்பள்ளியில், 7.56 லட்சத்தில் அமைக்கப்பட்ட சமையலறை கூடம், ரூ.3.75 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையையும் ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத்தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத்தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலா் தணிகாசலம், வாா்டு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.18 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிக்கு அடிக்கல்

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து ஆட்சியா் வரவேற்பு

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

