ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தை ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் முக்கிய இடமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், பாலூட்டும் தாய்மாா்களுக்காக, பாலூட்டும் அறை கட்டப்பட்டது. இந்த அறையை பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மாா்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த பல மாதங்களாக பாலூட்டும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மாா்கள் அறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பாலூட்டும் அறையை திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், பாலூட்டும் அறை கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு உள்ளதால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் தாய்மாா்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில் அசெளகரியம் ஏற்பட்டு வருகிறது. வீணாக பூட்டப்பட்டு உள்ள அறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது: அன்புமணி

அரியலூரில் பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம்!

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறை, மகளிா் ஓய்வறை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

