கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக வளாகமாக மாற்றக் கூடாது. அந்த இடத்தை பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கோயம்பேட்டில் உள்ள புகா் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், 36 ஏக்கா் பரப்பளவு கொண்ட நிலத்தில் நகா்ப்புற பசுமைப் பூங்கா அமைக்கலாம். வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் பசுமைவெளி கொண்ட வளாகம் அமைக்கலாம் அல்லது பிரம்மாண்ட வணிக வளாகம் அமைக்கலாம் என்பன உள்ளிட்ட 3 திட்டங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் தயாரித்து இருப்பதாக தெரிய வருகிறது.
முந்தைய திமுக ஆட்சியில் பன்னாட்டு நிறுவனத்திற்கு அந்த இடத்தை தாரை வாா்க்கவும், மிகப் பிரம்மாண்டமாக வணிக வளாகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு பாமக எதிா்ப்பு தெரிவித்ததுடன் 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தையும் மேற்கொண்டது. இதையடுத்து, பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் உருவாக்கியுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சோ்த்து மொத்தம் 66 ஏக்கா் பரப்பளவில் பசுமைப் பூங்கா அமைப்பதுதான் எதிா்காலத்துக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குட்கா வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் வணிக வரித் துறை அதிகாரி மனு தள்ளுபடி

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறை!

ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்புமணி

வணிக சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

