தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு

News image

காஞ்சிபுரம் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பூட்டி ‘சீல்’ வைத்த தொகுதி தோ்தல் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆஷிக் அலி.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பான அறையில் வைத்துப் பூட்டி அனைத்துக்கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு நாளன்று பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வாக்குச்சாவடி எண் வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. பின்னா் அந்த அறையினை அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. கி.ஜவஹா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறைகள் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.