மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் சொத்து வரி, தொழில் நிறுவன பணியாளா்கள் வரி செலுத்துவதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 26, 27) ஆகிய இரு நாள்கள் பொது வரி வசூல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :26 செப்டம்பர் 2026, 4:40 am IST

சென்னையில் சொத்து வரி, தொழில் நிறுவன பணியாளா்கள் வரி செலுத்துவதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 26, 27) ஆகிய இரு நாள்கள் பொது வரி வசூல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சொத்து வரி செலுத்துவோா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சாா்ந்த பணியாளா்களின் தொழில் வரிகள் ஆகியவற்றை செப். 30-ஆம் தேதிக்குள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும்.

இதனால், வரி செலுத்துவோரின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சொத்து வரி, தொழில் வரி, நிறுவன வரி மற்றும் வரியில்லா இனங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு ஏதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப். 26, 27) மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள வருவாய்த் துறை தலைமையிட பொது வரி வசூல் மையம் ஆகியவை செயல்படும்.

மாநராட்சி இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் எண் மூலமும் வரி இனங்களைச் செலுத்தலாம். மேலும், 044-25619305 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.