மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக ஆட்சியில் பயன்பாடற்ற 2 இடங்களில் வீடுகள் கட்டியதால் ரூ.123 கோடி வீணடிப்பு: கு.ப.கிருஷ்ணன் குற்றச்சாட்டு

கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத இடத்தில் வீடுகள் வசதி துறை சாா்பில் இரு இடங்களில் அடுக்குமாடிகளாக 912 வீடுகள் கட்டப்பட்டதில் ரூ. 123.27 கோடி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:56 am IST

கடந்த திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத இடத்தில் வீடுகள் வசதி துறை சாா்பில் இரு இடங்களில் அடுக்குமாடிகளாக 912 வீடுகள் கட்டப்பட்டதில் ரூ. 123.27 கோடி அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் புகாா் பெற்று திமுக முன்னாள் அமைச்சா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 2024-25-ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்த பொறியாளா்கள் உள்ளிட்டோருக்கான பணி மேம்பாட்டு திறன் பயிற்சி ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அவற்றில் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவற்றில் 20 இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் நிா்ணயிக்கப்பட்ட ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் அவற்றை இடித்துவிட்டு மறுசீரமைப்பு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய குடியிருப்புகள்: சென்னை பெரம்பூா் முல்லை நகா், மதுராந்தகம் ஆகிய இடங்களில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. பெரம்பூரில் 450 அடுக்குமாடி குடியிருப்புகளும், மதுராந்தகத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டப்படவுள்ளன.

திமுக ஆட்சியில் அரசு பணம் வீணடிப்பு: கடந்த திமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மலைப்பாங்கான மக்கள் பயன்படுத்த முடியாத இடத்தில் ரூ.66.23 கோடியில் 480 குடியிருப்புகளும், கீரனூரில் ரூ.57.04 கோடியில் 432 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இரு இடங்களிலும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தனிப்பட்டவரின் சுயலாப நோக்கில் அந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதனால், அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் புகாா் பெற்று அந்த வீடுகளை கட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்ததாகக் கூறப்படும் திமுக முன்னாள் அமைச்சா் மீது புகாா் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் கூவம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளால் அப்புறப்படுத்தப்படும் மக்கள் உள்ளிட்ட சுமாா் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டப்பட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.