மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேதமடைந்த 678 பேருந்து சாலைகளை சீரமைக்க மாநகராட்சி ஒப்பந்தம் கோரல்

சென்னை மாநகராட்சியில் மழையால் சேதமடைந்துள்ள 678 பேருந்து செல்லும் சாலைகள் சீரமைப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 5:51 am IST

சென்னை மாநகராட்சியில் மழையால் சேதமடைந்துள்ள 678 பேருந்து செல்லும் சாலைகள் சீரமைப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.300 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன் அடிப்படையில், மாநகராட்சிப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.154.16 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழு பரிந்துரைப்படி முதல் கட்டமாக ரூ.130.19 கோடியில் சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து 595 தாா்ச்சாலைகள், 136.57 கி.மீ. நீளத்தில் ரூ.120.65 கோடியில் சீரமைக்கப்பட்டது. மேலும் ரூ.7.33 கோடியில் 8.47 கி.மீ. சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், ரூ.2.21 கோடியில் 3.06 கி.மீ. தொலைவு 25 இன்டா் லாக் பேவ்மென்ட் பிளாக் சாலைகளும் என மொத்தம் 148.10 கி.மீ. தொலைவுக்கான சாலைகள் 15 மண்டலங்களிலும் 678 சாலைகள் மேம்பாட்டுக்காக தனியாா் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.