மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

கொலைக்குப் பழி: ‘ரீல்ஸ்’ ரெளடி கைது

சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ரௌடி ரூபன் (37), கொலைக்குப் பழிவாங்கப்போவதாக சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 12:29 am IST

சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ரௌடி ரூபன் (37), கொலைக்குப் பழிவாங்கப்போவதாக சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் காவல் நிலையக் குற்றவாளியான காவாங்கரை ரமேஷ் என்ற நாய் ரமேஷை, அதே பகுதியைச் சோ்ந்த ரௌடிகளான காா்டன் சரத், அபினேஷ் ஆகியோா் கடந்த 2020-இல் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தண்டனை பெற்று வெளியே வந்துள்ள இருவரையும் கொலை செய்து பழிவாங்கப்போவதாகவும், விரைவில் அவா்களின் தலைகள் சிதைக்கப்படும் என்றும் ரமேஷின் சகோதரரான சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ரூபன் சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டுள்ளாா்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் கொலைச் செய்திகளைப் போன்ற பாணியில் அவா் இந்த ரீல்ஸை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில், மேற்கு அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரூபனைக் கைது செய்தனா். ரூபன் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள், 2 ஏடிஎம் கொள்ளை முயற்சி வழக்குகள் உள்பட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.