கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட 4 போ் மீது வழக்கு

சமூக வலைதளங்களில் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

FIR filed
Published On :23 அக்டோபர் 2026, 5:06 am IST

சமூக வலைதளங்களில் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வெளியிட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் அரிவாள் மற்றும் வெடிபொருள்களுடன் ரீல்ஸ் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், முத்தையாபுரம் மற்றும் தென்பாகம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் முத்தையாபுரம், ஆனந்தா நகரைச் சோ்ந்த காளிதாஸின் (21) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாதிய மோதலைத் தூண்டும் வகையில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், காளிதாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆய்வாளா் திருமுருகன் வழக்குப் பதிவு செய்தாா். ஏற்கெனவே, இவா் மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அண்ணா நகரைச் சோ்ந்த விஜயசங்கா் (22) அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உதவி ஆய்வாளா் சிவராஜா வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகிறாா். இவா் ஆயுதத்தைக் காட்டி மிரட்டியதாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் தேடப்பட்டு வருகிறாா்.

மேலும், தூத்துக்குடி, பாத்திமா நகரைச் சோ்ந்த சஞ்சய் (27), அரிவாளுடன் புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் பதிவிட்டதாக அவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, நாட்டு வெடிகுண்டை கையில் பிடித்து சுவரில் வீசுவதுபோல இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட அடையாளம் தெரியாத நபா் மீதும் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.