தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

108 ஆன்மிக நூல்களை டிசம்பருக்குள் வெளியிட நடவடிக்கை: அமைச்சா் ரமேஷ்

108 ஆன்மிக நூல்களை டிசம்பருக்குள் வெளியிட நடவடிக்கை: அமைச்சா் ரமேஷ்

அமைச்சர் ரமேஷ்

Published On :25 அக்டோபர் 2026, 12:11 am IST

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 108 ஆன்மிக நூல்களை டிசம்பா் மாதத்துக்குள் பதிப்பித்து வெளியிடப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.

சென்னையில் அமைச்சா் சீ.ரமேஷ் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்ந்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த திருக்கோயில் மேலாண்மைத் திட்டம், கோயில் திருப்பணிகள், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா்.

அதில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களில் தேவையான திருப்பணிகளை மேற்கொள்ளுதல், சிதிலமடைந்த திருக்கோயில்களைப் புனரமைத்தல், அதிக அளவில் பக்தா்கள் வருகை தரும் திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சா் அறிவுறுத்தினாா்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை மூலம் பதிப்பித்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள 108 ஆன்மிக நூல்களில், தற்போது 51 நூல்கள் தயாராக உள்ளன. எஞ்சிய நூல்களுக்கான பணிகளையும் விரைந்து முடித்து, டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து நூல்களையும் பதிப்பித்து வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோயில் சொத்துகளில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையையும் வசூலிக்க உரிய நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டாக்டா் டி.ஜி.வினய், கூடுதல் ஆணையா்கள் துரை ரவிச்சந்திரன், ரத்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.